Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை எதிரொலி: பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு

Webdunia
திங்கள், 21 அக்டோபர் 2019 (07:10 IST)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 17ஆம் தேதி தொடங்கி கடந்த ஒரு வாரமாக நல்ல மழை பெய்து கொண்டிருக்கும் நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அறிவித்துள்ளார்.
 
அதேபோல் கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த இரு மாவட்டங்களை தொடர்ந்து சென்னை உள்பட இன்னும் ஒருசில மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்றிரவு முதல் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துடன் வாகனங்களை ஈயக்கி வருகின்றனர். சென்னையை பொருத்தவரை நேற்றிரவும் இன்று அதிகாலை முதலும் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. குறிப்பாக சைதாப்பேட்டை, அசோக்நகர், தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், அண்ணா சாலை, எழும்பூர், கோடம்பாக்கம், தி.நகர் உள்ளிட்ட இடங்களில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகின்றது
 
இதனிடையே இன்னும் இரண்டு நாட்களுக்கு சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

அடுத்த கட்டுரையில்
Show comments