Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யாவின் அடுத்த படத்தை இயக்கும் 'விஸ்வாச' இயக்குனர்

Webdunia
திங்கள், 22 ஏப்ரல் 2019 (17:16 IST)
சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் குறித்த அறிவிப்பு கடந்த சில நாட்களாக வெளிவந்து கொண்டிருப்பது தெரிந்ததே. சூர்யாவின் 'என்.ஜி.கே' திரைப்படம் மே 31ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அவரது நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கிய 'காப்பான்' திரைப்படம் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது
 
அதேபோல் சூர்யாவின் 38வது படத்தை தற்போது 'இறுதிச்சுற்று' இயக்குனர் சுதா கொங்காரா இயக்கி வருகிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது
 
இந்த நிலையில் சூர்யாவின் 39வது படத்தை ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கவிருப்பதாக இன்று காலை அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் இயக்குனர் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சற்றுமுன் 'சிறுத்தை' சிவா இயக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
அஜித் நடித்த 'விஸ்வாசம்' என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தை அடுத்து இயக்குனர் சிவா இயக்கவுள்ள படம் என்பதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படம் குறித்த மற்ற விபரங்கள் விரைவில் வெளியாகவுள்ளது

தொடர்புடைய செய்திகள்

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டி..! சகோதரிக்கு ஆதரவளிக்க வேண்டும்.! ராகுல் காந்தி..!!

முதல்வர் முக ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்: பெண் காவலர் அரிவாள் வெட்டு குறித்து ஈபிஎஸ்..!

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments