Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிம்புவுடன் இணையும் இளம் நடிகர்: அதிரடி ஆக்சன் படம் குறித்த அறிவிப்பு

சிம்புவுடன் இணையும் இளம் நடிகர்: அதிரடி ஆக்சன் படம் குறித்த அறிவிப்பு
, ஞாயிறு, 21 ஏப்ரல் 2019 (11:38 IST)
சிம்பு நடித்த 'செக்க சிவந்த வானம்' மற்றும் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' போன்ற படங்கள் சமீபத்தில் வெளியான நிலையில் அவர் தற்போது 'மாநாடு' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கவுள்ளார். இந்த நிலையில் ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாகவும் இதுவொரு அதிரடி ஆக்சன் படம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த படத்தில் சிம்புவுடன் இளம் நடிகர் கவுதம் கார்த்திக் நடிக்கவுள்ளார். இரண்டு இளம் நடிகர்கள் இணையும் இந்த ஆக்சன் படத்தில் இரண்டு முன்னணி நடிகைகள் நாயகிகளாக நடிக்கவிருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பு இன்னும் ஓரிருநாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
இந்த படத்தை பிரபல கன்னட இயக்குனர் நார்தன் இயக்கவுள்ளார். இவர் சிவ்ராஜ்குமார் நடித்த 'முஃப்தி' என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குண்டுவெடிப்பில் இருந்து தப்பித்த நடிகை ராதிகா!!!