Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னை காதலிப்பதாக கூறினார் - வைரமுத்து மீது மற்றொரு பெண்ணும் புகார்

Webdunia
திங்கள், 15 அக்டோபர் 2018 (15:37 IST)
கவிஞர் வைரமுத்து தனக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகைப்படம் மற்றும் இசைத்துறையில் பணிபுரிந்து வரும் சிந்துஜா ராஜாராம் என்பவர் புகார் கூறியுள்ளார்.
 
தான் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து சின்மயி பேச தொடங்கியதை அடுத்து, பல்வேறு துறையில் உள்ள பல பெண்கள் தங்கள் வாழ்வில் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து அவரிடம் தெரிவித்து வருகின்றனர். அதை அவர் அவரது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
 
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து சிந்துஜா ராஜாராம் என்பவரும் புகார் கூறியுள்ளார். கோடம்பாக்கத்தில் உள்ள வைரமுத்துவிற்கு சொந்தமான விடுதியில் தங்க நினைத்த போது, தன்னுடைய செல்போன் எண்ணை வாங்கிக் கொண்டார். ஆனால், அங்கு நான் தங்கவில்லை. உறவினர் வீட்டில் தங்கிக்கொண்டேன். என்னை அடிக்கடி தொடர்பு கொண்டு வைரமுத்து பேசினார். ஒருமுறை ஏ.ஆர்.ரகுமானிடம் அழைத்து சென்று அறிமுகம் செய்து வைத்தார். அவரிடம் சவுண்ட் இன்ஜினியராக சேர்த்து விடுவதாக கூறினார்.

 
அவரின் பேச்சியல் ஏதோ தவறு இருப்பதாக எனக்குப்பட்டது. ஒருமுறை, நான் உன்னை காதலிக்கிறேன். உன்னையே நினைத்துக்கொண்டிருக்கிறேன். உனக்காக கவிதைகள் எழுதியிருக்கிறேன். நீ பெசண்டநகர் அலுவலகத்துக்கு வா என்றார். எனக்கு புரிந்துவிட்டது. நீங்கள் என் தந்தை போன்றவர் என்றேன். ஆனால், என்னை சமாதானம் செய்ய முயன்றார். அதன்பின், அவரின் தொலைப்பேசி அழைப்புகளை நான் எடுக்கவே இல்லை.
 
அப்போது இதுபற்றி பேச தைரியம் வரவில்லை. தற்போது சின்மயிக்கு ஆதரவாக நிற்க முடிவு செய்துள்ளேன். ஏனெனில், அவரது புகாரை நம்புகிறேன்” என இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்தார்.
 
இவரின் பதிவை சின்மயியும் ரீடிவிட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்