Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.ஏ.எஸ் எட்டாக்கனியைப் பெற்று தந்தவர் – ஏன் தற்கொலை செய்தார் சங்கர்?

Webdunia
வெள்ளி, 12 அக்டோபர் 2018 (12:27 IST)
ஐ ஏ எஸ் தேர்வில் வெற்றி என்பது நீண்டகாலமாக தமிழர்களின் கனவாகவே இருந்து வந்தது. அந்த கனவை நனவாக்கி குறுகிய காலத்தில் 900 க்கும் மேற்பட்ட அதிகாரிகளை உருவாக்கியவர் ஷங்கர் ஐ ஏ எஸ் அகாடமியின் தலைவர் சங்கர்.

பிறந்தது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நல்லாகவுண்டம் பாளையத்தில். குடும்பமோ பரம்பரை பரம்பரையாக விவசாயத்தில் ஊறியது. ஆனால் இவருக்கோ கவனம் எல்லாம் கல்வியில் சென்றது. சிறுவயதிலேயே தாய் தந்தையரை இழந்த சங்கரை வளர்த்தது எல்லாம் பாட்டிதான். சிறு வயதிலேயே ஐ ஏ எஸ் கனவு. ஆனால் வயது முதிர்வுக் காரணத்தால் அது கைகூடாமல் போனது.

அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் ஐ ஏ எஸ் படிக்க வேண்டுமென நினப்பவர்களுக்கு தரமான பயிற்சி நிலையங்களோ அல்லது வழிகட்டிகளோ இல்லாத சூழ்நிலை. எனவே அதிகமாக வடநாட்டவர்களே ஐ ஏ எஸ் மற்றும் ஐ பி எஸ் போன்ற போட்டித் தேர்வுகளில் வட இந்தியர்களின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது.

அதை உடைக்க நினைத்த சங்கர் தமிழ்நாட்டில் ஒரு தரமான ஐ ஏ எஸ் பயிற்சி நிறுவனம் அமைக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு கடந்த 2004 ஆம் ஆண்டு சங்கர் ஐஏஎஸ் அகாடமியை ஆரம்பித்தார். ஆரம்பிக்கும் போது வெறும் 36 மாணவர்களோடு ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு தற்போது ஆண்டுக்கு 1500 மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இதுவரை ஒரு லட்சம் பேர் இவரது அகாடமியில் பய்ற்சி பெற்றுள்ளனர். இதுவரை சங்கர் அகாடமியில் படித்த மாணவர்களில் 900 பேர் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று இந்தியாவின் பல மாநிலங்களில் பல்வேறு முக்கிய பதவிகளில் செயலாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

நன்றாக வளர்ந்து வந்து கொண்டிருந்த அகாடமியைக் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்தான் விரிவாக்கி அண்ணாநகரில் உள்ள பல அடுக்கு மாடிக் கட்டிடத்திற்கு மாற்றினார். ஐஏஎஸ் தேர்வுகள் மட்டுமல்லாமல் தமிழ்நாடு அளவிலான போட்டித் தேர்வுகளான டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கும் பயிற்சியகங்களை தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டத் தலைநகரங்களில் நடத்தி வந்தார். மேலும் சங்கர் அகாடமியை அண்டை மாநிலங்களுக்கும் விரிவாக்கும் பணிகளை செய்து வந்தார்.

இத்தகைய இமாலயப் பணிகளை தனியாளாக குறுகிய காலத்தில் செய்துமுடிக்க ஒருத்தருக்கு எவ்வளவு மனதைரியமும் தன்னம்பிக்கையை வேண்டும். அவ்வளவு வலிமையான மனிதரான சங்கர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் துக்கத்தை விட அதிகமாக அதிர்ச்சியையேக் கொடுக்கிறது.

சங்கர் சமீப காலமாகவே சிலக் குடும்ப பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. நேற்றும் தனது மனைவியோடு ஏற்பட்ட வாக்குவாததில் மனமுடைந்து மது அருந்திவிட்டு சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் உள்ள மின்விசிறியில் தனது படுக்கை விரிப்பால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவரது உடலைக் கைப்பற்றிய போலிஸார் பினக்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். பினக்கூறாய்வுக்குப் பிறகு அவரது உடல் அவரது சொந்த ஊரான நாமக்கல் மாவடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு இறுதி மரியாதை செய்யப்படவுள்ளது. அவரது அகாடமியில் படித்து நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பேத்கர் பிறந்திருக்காவிட்டால், மோடி இன்னும் டீ விற்று கொண்டிருப்பார்: சித்தராமையா

எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது.. தவெக தலைவர் விஜய்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: பாராளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்தி..!

மணிப்பூர் கிளர்ச்சியாளர்களிடம் ஸ்டார் லிங்க் சாதனம் உள்ளதா? எலான் மஸ்க் விளக்கம்..!

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை மாதங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments