Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னை 3 கட்சிகள் அழைத்தன: காங்கிரஸில் இணைந்த ஷகிலா பேட்டி!

Webdunia
சனி, 27 மார்ச் 2021 (06:50 IST)
என்னை 3 கட்சிகள் அழைத்தன: காங்கிரஸில் இணைந்த ஷகிலா பேட்டி!
என்னை மூன்று கட்சிகள் அழைத்தனர் என்றும் அதில் எனக்கு பிடித்தது காங்கிரஸ் கட்சி என்பதால் அந்த கட்சியில் இணைந்தேன் என்றும் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகை ஷகிலா தெரிவித்துள்ளார். 
 
தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்த நடிகை ஷகிலா நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் என்பதும் அவருக்கு முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே.
 
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஷகிலா ’இன்று முதல் தேர்தல் பிரசாரம் செய்யப்போவதாக கூறினார். மேலும் தன்னை மூன்று கட்சிகள் அழைத்ததாகவும் அதில் சிறந்த கட்சி காங்கிரஸ் என்பதால் அதில் இணைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
 
தமிழ்நாட்டின் பிரச்சினை குறித்து தேர்தல் பிரச்சாரத்தில் பேசுவேன் என்றும் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் குறித்து மக்களிடம் எடுத்துக் கூறுவேன் என்றும் ஷகிலா இந்த பேட்டியில் கூறினார். ஷகிலா பேட்டி அளித்த போது அவருடன் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

திமுகவும் பாஜகவும் மறைமுக கூட்டாளிகள்.. தவெகவுக்கு போட்டி திமுக தான்: விஜய்

செல்போனில் தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்த கணவர்.. வழக்குப்பதிவு செய்த போலீஸ்..!

அதிமுக - பாஜக தோல்விக் கூட்டணி தான் ஊழல் கூட்டணி: முதல்வர் மு.க. ஸ்டாலின்

சென்னையில் ரூ.70 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை..! ஒரு லட்சத்தை நெருங்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments