சீனியர் கல்லூரி மாணவரை அடித்து டார்ச்சர் செய்த முதலாம் ஆண்டு மாணவர்கள்.. 13 பேர் சஸ்பெண்ட்..

Siva
திங்கள், 24 மார்ச் 2025 (09:28 IST)
பொதுவாக, முதலாம் ஆண்டு மாணவர்களைத்தான் சீனியர் மாணவர்கள் ரேக்கிங் செய்வார்கள் என்ற நிலையில், கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் சீனியர் மாணவரை 13 முதலாம் ஆண்டு மாணவர்கள் அடித்து டார்ச்சர் செய்த விவகாரத்தில் மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
 
கோவை-பாலக்காடு சாலையில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில், சீனியர் மாணவர் ஒருவர் பணம் திருடியதாக குற்றச்சாட்டப்பட்ட நிலையில், அவரை அடித்து உதைத்து கட்டிப்போட்டு 13 முதலாம் ஆண்டு மாணவர்கள் கொடுமைப்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
அந்த மாணவர் வலியால் கதறியபோதிலும், தாக்குதலை நிறுத்தாமல் தொடர்ந்து அடித்துள்ள காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இதனை அடுத்து, சீனியர் மாணவரை தாக்கிய 13 கல்லூரி மாணவர்களை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
 
இது போன்ற சம்பவங்களை தடுக்க, கல்லூரி நிர்வாகங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? சமூகவலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

அடுத்த கட்டுரையில்
Show comments