Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளையராஜாவை காரில் கடத்திய சிவகார்த்திகேயன் ரசிகர்! – திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்

Webdunia
சனி, 28 செப்டம்பர் 2019 (19:53 IST)
திருச்சியில் இந்து மகா சபை தலைவரை சிவகார்த்திகேயன் ரசிகர் மண்ர தலைவர் கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி அருகே உள்ள பெரம்பலூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். அந்த ஊரின் சிவகார்த்திகேயன் ரசிகர் மன்ற தலைவராக இருக்கும் இவர் வேலை தேடி வந்துள்ளார். அப்போது திருச்சியில் உள்ள இந்து மகா சபை தலைவர் இளையராஜா இவருக்கு அறிமுகமாகியுள்ளார். அவர் செந்தில்குமாருக்கு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

வேலைவாங்கி தருவதற்கு செலவு ஆகும் என்று சொல்லி பணமும் அடிக்கடி வாங்கியுள்ளார். ஆனால் வேலை மட்டும் வாங்கி தரும் அறிகுறியே தெரியவில்லை. பொறுமையிழந்த செந்தில்குமார் தனது பணத்தை திரும்ப தரும்படி இளையராஜாவிடம் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியது.
இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார் தன் நண்பர்களோடு திட்டமிட்டு, திருச்சி மார்க்கெட்டுக்கு வந்த இளையராஜாவை அல்லேக்காக வண்டியில் வாரி போட்டுக்கொண்டு தப்பித்தார்கள். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் செந்தில்குமார் குரூப்பை துரத்தி சென்றார்கள். கும்பகோணம் ரோட்டில் பாதிதூரம் வரை தப்பிசென்ற செந்தில்குமார் குரூப்பை பிடித்து இளையராஜாவை மீட்டார்கள் போலீஸ்.

இளையராஜாவை கடத்தியது தொடர்பாக செந்தில் குமார் மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேசமயம் செந்திலிடம் பணம் வாங்கி ஏமாற்றியது குறித்து இளையராஜாவிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது இதுதானோ? அண்ணா பல்கலை விவகாரம் குறித்து ஈபிஎஸ்

சென்னை புத்தகக் கண்காட்சி: நாளை தொடங்கி வைக்கிறார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

சென்னையில் டிரைவர் இல்லாமல் மெட்ரோ ரயில் திட்டம்.. சோதனை ஓட்டம் தொடங்கியது..!

லுங்கி கட்டிக்கொண்டு இசைக் கச்சேரிக்கு வந்த டி.எம்.கிருஷ்ணா! நிரம்பி வழிந்த மியூசிக் அகாடமி!

அரசு ஊழியர் பணி ஓய்வு விழா! கண் முன்னால் பலியான மனைவி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments