Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

5 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரி! – மக்களுக்கு எச்சரிக்கை!

5 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரி! – மக்களுக்கு எச்சரிக்கை!
, புதன், 25 நவம்பர் 2020 (12:17 IST)
சென்னையில் அதீத கனமழை பெய்து வரும் நிலையில் பல ஆண்டுகள் கழித்து இன்று செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையால் சென்னை,காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதீத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதனால் மாவட்டங்களில் உள்ள பெருவாரியான ஏரிகள் நிரம்பியுள்ளன. இந்நிலையில் சென்னையிம் மிக முக்கியமான ஏரியான செம்பரம்பாக்கம் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டிய நிலையில் தற்போது திறக்கப்பட்டுள்ளது.

தற்போது செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் விநாடிக்கு 1000 கனஅடி என்ற அளவில் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டில் சென்னையில் ஏற்பட்ட பெருமழையின் போது செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்ட நிலையில் 5 ஆண்டுகள் கழித்து இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேரிடர் உதவிக்கு இறங்கிய மக்கள் நீதி மய்ய படை! – கமல்ஹாசன் ட்வீட்!