Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தெர்மாக்கோல் திட்டத்தை கொண்டுவந்தது ஒரு குத்தமா?: அமைச்சர் செல்லூர் ராஜூவை வச்சு செய்யும் வீடியோ!

தெர்மாக்கோல் திட்டத்தை கொண்டுவந்தது ஒரு குத்தமா?: அமைச்சர் செல்லூர் ராஜூவை வச்சு செய்யும் வீடியோ!

Advertiesment
தெர்மாக்கோல் திட்டத்தை கொண்டுவந்தது ஒரு குத்தமா?: அமைச்சர் செல்லூர் ராஜூவை வச்சு செய்யும் வீடியோ!
, செவ்வாய், 2 மே 2017 (12:10 IST)
அமைச்சர் செல்லூர் ராஜூ கடந்த சில தினங்களுக்கு முன்னர் வைகை அணியில் நீர் ஆவியாவதை தடுக்க தெர்மாக்கோல் வைத்து நீரின் மேற்பரப்பை மூடும் ஒரு திட்டத்தை சோதனை செய்து பார்த்தார்.


 
 
அந்த திட்டம் ஆரம்பித்து வைத்த உடனேயே தோல்வியடைந்து கைவிடப்பட்டது. நீர் பரப்பில் அமைச்சர் தெர்மோக்கோல் போட்டுவிட்டு அந்த இடத்தை விட்டு கிளம்பும் முன்னரே தெர்மாக்கோல் அனைத்தும் காற்றில் அடிக்கப்பட்டு கரைக்கு தூக்கி வீசப்பட்டது. இதனால் அந்த இடத்திலேயே அந்த திட்டம் தோல்வியடைந்தது.
 
இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக சமூக வலைதளங்களில் அமைச்சர் செல்லூர் ராஜூவை விமர்சித்தும் கலாய்த்தும் வந்தனர். சீன பத்திரிக்கை கூட இந்தனை கிண்டலடித்து இருந்தது.

 

நன்றி: Madras Central
 
இந்த சம்பவம் நடந்து சில நாட்கள் ஆனாலும் சமூக வலைதள போராளிகள் இதனை விட்டப்பாடில்லை. மீம்ஸ் போட்டு தள்ளுகின்றனர். தெர்மாக்கோல் திட்டம் மாதிரில் பல காமெடியான திட்டங்களை கூறி அமைச்சரை கிண்டல் செய்து வருகின்றனர். அதில் மெட்ராஸ் செண்ட்ரல் என்ற குழு வெளியிட்ட வீடியோ மீம்ஸ் வைரலாக பரவி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடம்பு முழுவதும் 75 ஊசிகள்: எடுக்க முடியாமல் டாக்டர்கள் தவிப்பு!!