நடிகை கஸ்தூரியை பிடிக்க முடிந்த தமிழக காவல்துறையின் தனிப்படை, செந்தில் பாலாஜி தம்பியை பிடிக்க முடியலையா? என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் எழுப்பிய கேள்வி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கஸ்தூரி ஒரு திரைப்பட நடிகை. அவருக்கு 12 வயதான ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட மகன் உள்ளார். தனது மகனை முழுவதும் கவனித்துக் கொண்டிருந்தார். திமுகவினர் பேசாத பேச்சையா அவர் பேசிவிட்டார்.
ஒரு நடிகையை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைத்து காவல்துறை செயல்பட்டது. ஆனால், ஒரு நடிகையை பிடிக்க இவ்வளவு செய்யும் காவல்துறை, அமைச்சர் செந்தில் பாலாஜி சிறைக்கு சென்று வந்து ஒரு வருடத்திற்கும் மேலாகியும் அவரின் தம்பியை இன்னும் பிடிக்க முடியாதது ஏன்?
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது? மொத்தத்தில் இந்த அரசை மாற்ற வேண்டும் என்று தான் மக்கள் முடிவு செய்துள்ளனர். எத்தனை நாட்களுக்கு முன்னால் தேர்தல் பணிகளை ஆரம்பித்தாலும், சட்டசபை தேர்தலில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தோல்வி அடைவார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.