Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 8 April 2025
webdunia

விஜய் அரசியலுக்கு வரலாமா? - சீமான் கூறும் பதில் என்ன?

Advertiesment
Seeman
, வியாழன், 15 ஜூன் 2017 (11:29 IST)
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது பற்றி நாம் தமிழர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
சமீபகாலமக நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி எல்லோராலும் விவாதிக்கப்படுகிறது. இதுபற்றி ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்த சீமான், ரஜினிகாந்த் நடிக்கும் வேலையை மட்டும் பார்க்கட்டும். நாட்டை ஆள்கிற உரிமை அவருக்கு கிடையாது. அது தமிழர்களுக்கு மட்டுமே இருக்கிறது. எனவே, அவர் நாடாள்வதை ஏற்க முடியாது என கூறியிருந்தார்.
 
இந்நிலையில், சமீபத்தில் நடிகர் விஜய் அரசியலுக்கு வரலாமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “விஜய் தாரளமாக அரசியலுக்கு வரலாம். ஆனால், வந்தால் நேரிடையாக முதல்வரகாத்தான் வருவேன் என அவர் ஆசைப்படக்கூடாது. அவர் மக்களை சந்திக்கட்டும், அவர்களுக்காக சில வருடங்கள் வேலை செய்யட்டும். அதன் பின் பதவிக்கு வரட்டும். அவர் இந்த மண்ணின் மைந்தர். இங்கு வாழ்வதற்கும், ஆள்வதற்கும் அவருக்கு உரிமை இருக்கிறது. மற்றவர்களுக்கு வாழ்வதற்கு மட்டுமே உரிமை இருக்கிறது. ஆளும் உரிமை தமிழர்களுக்கு மட்டுமே இருக்கிறது” என அவர் பதிலளித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பூங்காவில் இரவில் மாணவியை சீரழித்த காமுகர்கள்!