Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோட்டாவும், சால்னாவும் விற்க சொல்வார் மோடி: நார் நாராக கிழிக்கும் சீமான்!

Webdunia
செவ்வாய், 6 பிப்ரவரி 2018 (17:16 IST)
ஒரு இளைஞர் பக்கோடா விற்பதன் மூலம் நாளொன்றுக்கு 200 ரூபாய் வருமானம் ஈட்டுகின்றார் என்றால், அதுவும் வேலைவாய்ப்பு தான் என பிரதமர் மோடி கூறியிருந்தார். பிரதமரின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் வலுத்து வருகின்றனர்.
 
இந்நிலையில் எம்பியான பின்னர் பாஜக தலைவர் அமித்ஷா தனது கன்னிப்பேச்சில் மோடியின் பக்கோடா கருத்தை வரவேற்று பேசினார். இதனையடுத்து மேலும் மோடியின் பகோடா வேலைவாய்ப்பு குறித்த கருத்துக்கு விமர்சனங்கள் வலுக்கின்றனர்.
 
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மோடியின் இந்த பக்கோடா வேலைவாய்ப்பு குறித்து நார் நாராக கிழித்துள்ளார். முதலில் பிரதமரும், அமித்ஷாவும் பக்கோடா விற்றுக் காட்டினால் அதை பார்த்து நாமும் கற்றுக்கொண்டு விற்கலாம்.
 
பக்கோடா விற்பது நல்ல வேலை என்றால் மோடி ஏன் பிரதமராக இருக்க வேண்டும்? அமித்ஷா ஏன் பாஜக தலைவராக இருக்க வேண்டும்? இருவரும் பக்கோடா விற்க செல்ல வேண்டியதுதானே. நாட்டின் பிரதமரும், கட்சியின் தலைவரும் பக்கோடா விற்பதை பார்த்து நாமும் பக்கோடா விற்க போய்விடலாம்.
 
ஒரு காலத்தில் மோடி டீ விற்றார், இப்போது நம்மை பக்கோடா விற்க சொல்கிறார். அடுத்தது புரோட்டாவும், சால்னாவும் விற்க சொன்னாலும் சொல்லலாம். ஏதோ கேடு கெட்ட நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றார் சீமான்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புயல் சின்னம்.. 3ஆம் எண் கூண்டை ஏற்ற துறைமுகங்களுக்கு அறிவுறுத்தல்..!

ஏஐ துறை ஆலோசகராக சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்: டிரம்ப் நியமனம்..

ஊழியர்களுக்கு கார், ராயல் என்பீல்ட் வாங்கி கொடுத்த தொழிலதிபர்! - சென்னையில் ஆச்சர்யம்!

எலான் மஸ்க் என் நண்பர்தான்.. அதுக்காக அவர் அதிபராக முடியாது! - ட்ரம்ப் கொடுத்த அதிர்ச்சி பதில்!

விவாகரத்து பெற்ற பணக்காரர்களுக்கு குறி.. 3 பேரை திருமணம் செய்து ரூ.1.21 கோடி மோசடி செய்த இளம்பெண்..!

அடுத்த கட்டுரையில்
Show comments