Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் போட்டியா?

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2023 (16:19 IST)
ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 
 
ஈரோடு இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக திமுக காங்கிரஸ் பாஜக உள்ளிட்ட கட்சிகள் இந்த தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றன. 
 
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு இந்த தொகுதி ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதுபோல் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு இந்த தொகுதி ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
 
 இந்த நிலையில் செய்தியாளர்களை இன்று சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி உறுதியாக போட்டியிடும் என்றும் வேட்பாளர் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்
 
 மேலும் நானும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு சென்று பிரச்சாரம் செய்வேன் என்று அவர் கூறியதால் சீமான் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போலி உறுப்பினர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதா? அறப்போர் இயக்கம் கேள்வி..!

ராஜ்யசபா தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தள்ளுபடி: பெரும்பான்மை இல்லை என அறிவிப்பு..!

ராகுல் காந்தி என்னை நெருங்கி வந்தார்: பா.ஜ.க. பெண் எம்.பி. புகாரால் பரபரப்பு.!

பாஜக எம்பிக்கள் தள்ளியதால் எனக்கு காயம்: மல்லிகார்ஜுன கார்கே புகார்

காங்கிரஸ் கட்சியின் வன்முறை நாடாளுமன்றம் வரை சென்றுள்ளது: கங்கனா ரனாவத்

அடுத்த கட்டுரையில்
Show comments