Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவாரூர் தொகுதியின் முதல் வேட்பாளர் அறிவிப்பு

Webdunia
புதன், 2 ஜனவரி 2019 (19:42 IST)
முன்னாள் திமுக தலைவர் மு.கருணாநிதி காலமானதால் காலியான திருவாரூர் தொகுதிக்கு வரும் 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் இந்த தொகுதியின் வேட்பாளரை தேர்வு செய்வதில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் பிசியாக உள்ளன.

இந்த நிலையில் திருவாரூர் இடைத்தேர்தலில் யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடுவோம் என்று அறிவித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சற்றுமுன் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக சாகுல் அமீது என்பவரை அறிவித்துள்ளார். மேலும் இவருடைய வெற்றிக்கு கட்சியின் அனைத்து பொறுப்பாளர்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் இந்த தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாகவும், தினகரன் சார்பில் ஒரு முக்கிய வேட்பாளரும், அதிமுக சார்பில் ஒரு பிரபலமும் போட்டியிடுவார்கள் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments