Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுக்குழு வழக்கு தீர்ப்பு எதிரொலி: அதிமுக அலுவலகத்திற்கு பாதுகாப்பு..!

Webdunia
வியாழன், 23 பிப்ரவரி 2023 (10:37 IST)
அதிமுக பொதுக்குழு செல்லாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிமுக பொது குழு கூடியது என்பதும் அந்த பொது குழுவில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே. ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறை நீக்கப்பட்டு பொதுச்செயலாளர் என்ற பதவி கொண்டு வருவதாக அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் ஏற்றப்பட்டது. இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு செல்லாது என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது என்பதும், இருதரப்பு வாதங்களும் நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று சுப்ரீம் கோர்ட் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதிமுகவின் அலுவலகத்திற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.
 
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.,
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி.. நாளை முதல் முன்பதிவு தொடக்கம்..!

பிரியங்கா காந்தி கன்னம் போல சாலை அமைப்பேன்: பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு..!

திருமணமாகாதவர்கள் தங்க அனுமதி இல்லை: ஓயோ அதிரடி அறிவிப்பு..!

சிந்துவெளி எழுத்து முறை.. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்? அன்புமணி கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments