Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை பக்கத்துல இப்படி ஒரு இடமா? முட்டுக்காட்டில் சூப்பரான படகு ஹோட்டல் தொடக்கம்!

Prasanth Karthick
செவ்வாய், 7 ஜனவரி 2025 (10:08 IST)

சென்னை அருகே உள்ள முட்டுக்காடு ஏரியில் அதிநவீன மிதக்கும் உணவகம் இன்று தொடங்கப்படுகிறது.

 

 

சென்னை அருகே உள்ள முட்டுக்காடு நகரத்தாருக்கு ஓய்வுக்கு சிறப்பான சுற்றுலா பகுதியாக உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக தமிழ்நாடு சுற்றுலா துறை, க்ரேண்டர் மரைன் இண்டெர்நேஷனல் என்ற நிறுவனத்துடன் இணைந்து முட்டுக்காடு ஏரியில் மிதக்கும் படகு உணவகத்தை உருவாக்கியுள்ளனர்.

 

இந்த உணவகத்தில் உணவு அருந்தியபடி முட்டுக்காடு ஏரியின் அழகை ரசித்தபடி ஏரியில் நீங்கள் பயணிக்கலாம். 125 அடி நீளமும், 25 அடி அகலமும் உள்ள இந்த மிதவை உணவகத்திற்கு Seanz Cruise என பெயரிடப்பட்டுள்ளது. இங்கு உணவகத்தோடு இசை, நடன அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர பிறந்தநாள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தும் அளவிற்கு சிறிய அரங்கம் உள்ளிட்டவை அமைந்துள்ளது.

 

முட்டுக்காடு ஏரியில் 1.5 கிலோ மீட்டர் வரை பிரத்யேக பாதையில் பயணிக்கும் இந்த மிதவை உணவகத்தில் அமர்ந்தபடி சூரிய உதயம், அஸ்தமனத்தையும், ஏரியின் அழகையும் கண்டு ரசிக்க முடியும்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை பக்கத்துல இப்படி ஒரு இடமா? முட்டுக்காட்டில் சூப்பரான படகு ஹோட்டல் தொடக்கம்!

முதல்முறையாக பறவை காய்ச்சலுக்கு பலியான உயிர்.. அமெரிக்காவில் அதிர்ச்சி..!

சீனாவில் வைரஸ் பரவுதா? லாக் டவுனா? சீனாவிலிருந்து வீடியோ வெளியிட்ட தமிழ் டாக்டர்!

டிரான்ஸ்பார்மரை பெயர்த்தெடுத்து திருடிய மர்ம நபர்கள்.. ஒட்டுமொத்த கிராமமே இருளில் தவிப்பு..!

நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம்: டெல்லி, பீகார், அஸ்ஸாமிலும் தாக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments