தற்போதைக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை – அன்பில் மகேஷ் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 23 செப்டம்பர் 2021 (13:10 IST)
தமிழகத்தில் தற்போதைக்கு 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படாது என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கபடாமல் இருந்து வந்த நிலையில் இந்த மாதம் தொடக்கத்திலிருந்து 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் சுழற்சி முறையில் வகுப்புகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் அடுத்தகட்டமாக 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து அரசு ஆலோசனைகள் மேற்கொண்டு வந்தது. இதனால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி மக்களிடையே இருந்து வருகிறது.

இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் ”பள்ளிகள் திறப்பு குறித்து தொடர்ந்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இப்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வளர்ப்பு கிளியை காப்பாற்ற போய் உயிரிழந்த நபர்.. பெங்களூரில் சோகம்...

அண்ணாமலை கம்முனு இருக்கணும்.. தலைவருக்கு தெரியும்!.. தவெக பதிலடி!...

டிசம்பர் 19-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல்.. பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

10 லட்சத்தில் தொழில்.. 2 லட்சம் கடன்!.. விண்ணப்பிப்பது எப்படி?...

சென்னை வருகிறார் பியூஷ் கோயல்.. அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments