Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குட்கா பயன்படுத்தியதாக குற்றச்சாட்டால் பள்ளி மாணவர் தற்கொலை!

குட்கா பயன்படுத்தியதாக குற்றச்சாட்டால் பள்ளி மாணவர் தற்கொலை!
, வியாழன், 8 டிசம்பர் 2022 (17:35 IST)
சென்னை கொட்டிவாக்கத்தில்  உள்ள பள்ளியில் குட்கா பயன்படுத்தியதாக மாணவர் மீது குற்றஞ்சாட்டியதை அடுத்து, அவர் தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சின்ன நீலாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ். இவரது 2 வது மகன் தர்ஷன் கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 29, 30 ஆம் தேதி கவின் குமார் உடல் நிலை சரியில்லாததால்,  பள்ளிக்குச் செல்லவில்லை, பின்னர், டிசம்பர் 1 ஆம் தேதி பள்ளிக்குச் சென்றபோது, உடற்பயிற்சி ஆசிரியர் அவரை அடித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இதுபோல் ஒருமுறை நடந்துள்ள நிலையில், இதுகுறித்து மாணவர் பெற்றோரிடம் கூறவே அவர்கள் பள்ளி முதல்வர் சீசரிடம் புகார் தெரிவித்தனர்.

அதற்கு முதல்வர், கவின் குமார் தடை செய்யப்பட்ட குட்பா பொருட்களை பயன்படுத்தியதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 2 ஆம் தேதி கவின் குமார் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்போது உடற்பயிற்சி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முதல்வர் மற்றும் ஆசிரியர் செல்லபாண்டியனையும் கைது செய்ய வேண்டும் என பெற்றோர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

Edited By Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாண்டஸ் புயல்:" சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!