Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12ம் வகுப்பு மாணவியை சீரழித்த பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்...

Webdunia
திங்கள், 18 செப்டம்பர் 2017 (16:30 IST)
பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை அப்பள்ளின் முதல்வர் மற்றும் ஆசிரியர் இருவரும் சேர்ந்து சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ராஜஸ்தான் மாநிலம் சிகார் நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியை அப்பள்ளியின் முதல்வரும், ஒரு ஆசிரியரும் சேர்ந்து வெகு நாட்களாகவே பாலியல் பலாத்காரம் செய்து வந்தனர். இதில் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். எனவே, அவரை ஷாக்புராவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருகலைப்பு செய்துள்ளனர்.
 
அதன் பின் வீட்டிற்கு சென்ற அந்த சிறுமியின் உடலை மிகவும் மோசமடைந்தது. அதன் பின்னரே அவரின் பெற்றோருக்கு இந்த தகவல் தெரியவந்தது. எனவே, இதுகுறித்து அந்த பகுதி காவல் நிலையத்தில் அந்த சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். இது தெரிந்ததும் பள்ளியின் முதல்வரும், அந்த ஆசிரியரும் தலைமறைவாகி  விட்டனர். 
 
ஜெய்ப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அந்த சிறுமியின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளதாக தெரிகிறது. 
 
இதைத் தொடர்ந்து பள்ளியின் முதல்வர் மற்றும் அந்த ஆசிரியர் மீது போலீசர் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண்..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

மதுவிலக்கு துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்க.! கள்ள மௌனம் காக்கும் முதல்வர்..! அண்ணாமலை...

4 நகராட்சிகள் 20 நாட்களில் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்.! அமைச்சர் கே.என். நேரு அறிவிப்பு.!!

இதெல்லாம் சகஜம்தான்… ஐ வில் கம்பேக்- தீவிபத்தில் சிக்கிய சிறுவன் பேட்டி!

தனக்கு பிறந்ததா என சந்தேகம்.. 1 வயது குழந்தையை கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்