Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செங்கோட்டையனின் 37 அதிரடி அறிவிப்புகள்: வெற்றி பாதையை நோக்கி கல்வித்துறை

, வெள்ளி, 16 ஜூன் 2017 (05:42 IST)
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்றதில் இருந்தே பல அதிரடி அறிவிப்புகள் வெளிவந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு பொதுதேர்வு என்ற அறிவிப்பு உள்பட பல அறிவிப்புகள் பெரும் வரவேற்பை பெற்றன.



 


இந்த நிலையில் நேற்று சட்டசபையில்  உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும் போட்டி போட்டுக்கொண்டு அறிவிப்புகளை வெளியிட்டனர். குறிப்பாக அமைச்சர் செங்கோட்டையன் 37 அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.

அந்த அறிவிப்புகளில் சில முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு:

தமிழகம் முழுவதும் 30 புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும். மலை கிராமங்களில் தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும்

• மெட்ரிக் பள்ளிகள் தொடங்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

• 486 அரசு பள்ளிகளில் கணினி வழி கற்றல் மையங்கள் அமைக்கப்படும்

• ரூ.30 கோடி செலவில் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கப்படும்

• கல்வி வளர்ச்சியில் சிறப்பாக செயல்படும் பள்ளிகளுக்கு புதுமை கல்வி விருது வழங்கப்படும்

• 3 கோடி செலவில் 32 மாவட்டங்களில் புத்தகக் கண்காட்சி நடத்தப்படும்

• 4084 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்.

• மதுரையில் ஒரு லட்சம் நூல்களுடன் மாபெரும் நூலகம் அமைக்கப்படும்

• கீழடியில் ஒரு நூலகம் அமைக்கப்படும்

• 17 ஆயிரம் தற்காலிக பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றப்படும்

• அரசு தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும்.

• முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு 6000 மாத உதவித்தொகை வழங்கப்படும்

• 89 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூன்று இளைஞர்கள் திருமணம்: ஒரே வீட்டில் குடும்பம் நடத்தும் கொடுமை