Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உண்ணாவிரதத்தை துவங்கிய சவுக்கு சங்கர்! அடுத்து என்ன நடக்கும்?

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (13:11 IST)
கடலூர் மத்திய சிறையில் உள்ள சவுக்கு சங்கர் சொன்னதை போல உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார் என  தகவல்.

 
நீதித்துறை குறித்து அவமதிப்பு செய்யும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக சவுக்கு சங்கர் மீது வழக்கு தொடரப்பட்டு அவருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் தற்போது மத்திய கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு அரசு ஆவணங்களை கசியவிட்டதாக பணிநீக்கம் செய்யப்பட்ட சவுக்கு சங்கர் தற்போது  அரசுப் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

இந்நிலையில் சிறையில் இருக்கும் அவரை பார்வையாளர்கள் சந்திக்க மறுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சம்மந்தமாக ரெட்பிக்ஸ் சேனலின் நிறுவனர் பெலிக்ஸ் ஜெரால்டு தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பார்வையாளர்களைப் பார்க்க அனுமதி மறுப்பது மற்றும் 24 மணி நேரமும் தனிமை சிறையில் வைத்திருப்பது ஆகியவற்றுக்காக சவுக்கு சங்கர் நாளை முதல் சிறையில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகின. மேலும் தன்னை சென்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் எனவும் அவர் இந்த போராட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்தார்.

இந்நிலையில் கடலூர் மத்திய சிறையில் உள்ள சவுக்கு சங்கர் சொன்னதை போல உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார் என   தகவல் வெளியாகியுள்ளது. எனவே இவருக்கு பார்வையாளர்களைப் பார்க்க அனுமதி வழங்கப்படுமா என பொருத்திருந்து பார்க்க வேண்டும்.

Edited By: Sugapriya Prakash

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருவண்ணாமலையில் தீபத்திருவிழா: 1000க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள்..!

ஈவிஎம் மெஷின்களில் குளறுபடிகள்! மகாராஷ்டிரத்தில் மறு தேர்தல் வேண்டும்: சிவசேனா கோரிக்கை

இன்று காலை 10 மணிக்குள் 13 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

இரவில் பெய்த திடீர் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகள் விடுமுறை?

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments