Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக பொதுசெயலாளர் என்றே கடிதம் எழுதிய சசிக்கலா! – அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (12:16 IST)
அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரிலேயே அதிமுக தொண்டர்களுக்கு சசிக்கலா கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் அதிமுகவின் பொன்விழா தொடக்க நிகழ்வு நடந்த நிலையில் சென்னையில் எம்.ஜி.ஆர் இல்லத்தில் அதிமுக கொடியை ஏற்றிய சசிக்கலா, அங்கு அதிமுக பொதுச்செயலாளர் என்றே தனக்கு கல்வெட்டு வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது அதிமுக பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டே அதிமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ள சசிக்கலா ”புலியின் குகையை பூனைகளுக்கு பரிசளிக்கலாமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளதுடன், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.. இது அறிந்ததுதான்., விரைவில் வெல்வோம் சகோதரர்களே என்று தெரிவித்துள்ளார். சசிக்கலாவின் இந்த கடிதம் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊட்டி, கொடைக்கானல் செல்ல ஏப்ரல் 1 முதல் கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு ‘ரூ' பிடிக்காது: செல்வபெருந்தகை..!

19 மாவட்டங்களுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம். தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!

நிறுவப்பட்ட இரண்டே நாட்களில் திருட்டு போன அம்பேத்கர் சிலை.. தீவிர விசாரணை..!

ஏர்டெல், ஜியோவுடன் ஸ்டார்லிங்க் கூட்டு.. காரணம் பிரதமர் மோடி தான்..காங்கிரஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments