நான் நினைச்சா ஆட்சியை கலைச்சிடுவேன்: மிரட்டும் அதிமுக அம்மா எம்.எல்.ஏ

Webdunia
புதன், 12 ஏப்ரல் 2017 (04:10 IST)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து அறிவிப்பு வெளியானதில் இருந்தே தமிழக அரசு எப்போது வேண்டுமானாலும் கலைக்கப்படும் சூழ்நிலை இருப்பதாக ஏற்கனவே அரசியல் விமர்சகர்கள் கூறி வரும் நிலையில் தினகரனின் ஆதரவாளரும், அதிமுக அம்மா அணி எம்.எல்.ஏவுமான கனகராஜ் 'நான் நினைச்சா ஆட்சி கலைந்துவிடும்' என்று அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



 


சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடையை அமைக்க எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் மீது நேற்று போலீசார் தடியடி நடத்தியதை அனைவரும் கண்டித்து வரும் நிலையில் இந்த தடியடிக்கு அந்த தொகுதி எம்.எல்.ஏ கனகராஜ் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த தடியடி குறித்து கருத்து தெரிவித்த சூலூர் அதிமுக அம்மா அணி எம்எல்ஏ கனகராஜ், 'மக்களுக்கு தொல்லை கொடுக்கும் டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால் என் பதவியை ராஜினாமா செய்வேன் என்று கூறியுள்ளார். அணி மாறுவீர்களா என்று கேட்டதற்கு, எதற்கு அணி மாறவேண்டும். ராஜினாமா தான் செய்வேன். ராஜினாமா செய்தால் இடைத்தேர்தல் வரும். என் தொகுதி மக்கள் சம்பாதிப்பார்கள், சம்பாதிக்கட்டும் என்று கூறினார்.

மேலும் 122 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் நான் ராஜினாமா செய்தால் பலம் குறையும், அதனால் ஆட்சி கலையும். ஆட்சி கலைந்தால் கலையட்டும் என்று ஆவேசமாக கூறி இந்த பிரச்சனையில் இருந்து அவர் தப்பித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றத்தில் இருப்பது 'தீபத்தூண் அல்ல, சமணர் கால தூண்': கோவில் தரப்பு வாதம்!

மாலையில் மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.. 1 சவரன் 1 லட்சத்தை தாண்டியதால் பரபரப்பு..!

லாட்ஜ் 4வது மாடியில் 7 நண்பர்களுடன் இளம்பெண் விருந்து.. போலீஸ் வந்ததால் இளம்பெண் செய்த விபரீத செயல்..!

60 ஆண்டுகளுக்கு முன் இமயமலையில் தொலைந்த சிஐஏ அணுகுண்டு.. இதனால் இந்தியாவுக்கு ஆபத்தா?

பஸ்ஸில் ஓடிய திலீப் படம்!. கோபமான பெண்!.. கேரளாவில் களேபரம்....

அடுத்த கட்டுரையில்
Show comments