Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய உளவாளிக்கு தூக்கு! சுஷ்மா ஸ்வராஜ் எச்சரிக்கை: பாகிஸ்தான் பதிலடி

Webdunia
புதன், 12 ஏப்ரல் 2017 (02:00 IST)
இந்திய உளவாளி என்று குற்றம் சாட்டப்பட்டு பாகிஸ்தானால் தூக்கு தண்டனைக்கு ஆளாகியுள்ள குல்பூஷன் யாதவ்வை காப்பாற்ற கடைசி முயற்சியாக இந்தியா பலகட்ட பேச்சுவார்த்தை நடத்திவிட்டது. ஆனால் பாகிஸ்தான் பிடிவாதமாக குல்பூஷனை தூக்கிலிட முடிவு செய்துள்ளது.





இந்த நிலையில் குல்பூஷன் யாதவ் தூக்கு தண்டனை விவகாரத்தால், இரு நாட்டு உறவுகளும் பாதிக்கப்படும்' என்று சுஷ்மா ஸ்வராஜ் பாகிஸ்தானுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்தார். மேலும் இந்தியரான குல்பூஷனுக்கு  தண்டனை நிறைவேற்றப்பட்டால், அது திட்டமிட்ட கொலையாகக் கருதப்படும் என்றும் பாகிஸ்தானுக்கு அவர் எச்சரிக்கை விடுத்தார்.

இந்தியாவின் எச்சரிக்கைக்குப் பதிலளித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்,' அனைத்து அச்சுறுத்தலுக்கும் பாகிஸ்தான் படை தயாராக உள்ளது என்றும், மேலும், அண்டை நாடுகளுடன் நட்பு பாராட்டவே பாகிஸ்தான் விரும்புகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

நவாஸ் ஷெரீஃப்பின் இந்த பேச்சு, இரு நாடுகளுக்கிடையே பதற்றத்தை உண்டாக்கியுள்ளதாக கருதப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி.. மும்பை சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை..!

சிந்தூர் என்பது ஒரு மதத்திற்கு தொடர்புடையது.. வேறு பெயர் வையுங்கள்: காங்கிரஸ்..

அதள பாதாளத்திற்கு சென்ற பங்குகள்.. கராச்சி பங்குச்சந்தையை மூட உத்தரவு..!

பஞ்சாப் எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை.. தீவிரவாதியா?

சில ரகசியங்களை பகிர முடியாது என மத்திய அரசு கூறியது: ராகுல் காந்தி பேட்டி..

அடுத்த கட்டுரையில்
Show comments