Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக கிளை கழகங்கள் கலைப்பு; சசிகலா உருவ பொம்மை எரிப்பு: தொடரும் எதிர்ப்பலை!

அதிமுக கிளை கழகங்கள் கலைப்பு; சசிகலா உருவ பொம்மை எரிப்பு: தொடரும் எதிர்ப்பலை!

Webdunia
சனி, 31 டிசம்பர் 2016 (13:25 IST)
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா இன்று பொறுப்பேற்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.


 
 
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் பொதுக்குழுவால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை எதிர்த்து பெரம்பலூரில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
பெரும்பலூர் மாவட்டத்தில் அதிமுகவினர் ஒன்றுகூடி சசிகலாவின் உருவ பொம்மையை எரித்தனர். பின்னர் பெரம்பலூர் மாவட்டத்தில் அதிமுக கிளை கழகங்களை கலைப்பதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
 
இதே போல வேலூரில் சசிகலாவுக்கு ஆதரவாக அமைச்சர்கள் வைத்த பேனரில் சசிகலாவின் புகைப்படத்தை சேதப்படுத்தியுள்ளனர் அதிமுகவினர். மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுகவினர் அதிகம் உள்ள அறந்தாங்கி அருகே உள்ள மறமடக்கி கிராமத்தில் சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உருவ பொம்மையை எரித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பொங்கல் தினத்தில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments