Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ. இருக்கும் போதே ஆட்சியை நடத்தியது சசிகலா தான்: பொன்னையன் ஓப்பன் டாக்!

ஜெ. இருக்கும் போதே ஆட்சியை நடத்தியது சசிகலா தான்: பொன்னையன் ஓப்பன் டாக்!

Webdunia
புதன், 4 அக்டோபர் 2017 (13:04 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த வருடம் டிசம்பர் 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது மரணத்துக்கு பின்னர் அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் அரங்கேறி வருகின்றன.


 
 
சசிகலாவுக்கும் அவரது குடும்பத்துக்கும் எதிரான் மனநிலையில் அதிமுக நிர்வாகிகள் பலர் வந்துள்ளனர். ஜெயலலிதா மரணத்தில் சசிகலா மீதே சந்தேகத்தை வைக்கின்றனர் அவர்கள். இந்நிலையில் ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது அவருக்கு தெரியாமலே தமிழக அரசை சசிகலா தான் இயக்கி வந்ததாக முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறியுள்ளார்.
 
அதிமுக செய்தி தொடர்பாளரும், எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்து அமைச்சரவையில் இடம் பெற்றவருமான பொன்னையன் பிரபல தமிழ் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சசிகலா குறித்து பல பரபரப்பு தகவல்களை கூறியுள்ளார்.
 
அதிமுகவில் சசிகலாதான் எல்லாம் என்கிற நிலை ஏற்பட காரணம் என்ன? என பொன்னையனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ஜெயலலிதா ஐந்து வயது குழந்தையின் உள்ளம் கொண்டவர். தனக்கு உதவியாளராக சசிகலாவை வைத்திருந்தார். திறமைசாலியாக இருந்த சசிகலாவை தனது வீட்டுப் பணிக்காக பயன்படுத்தினார்.
 
ஆனால் தந்திரசாலியான சசிகலா எப்படியோ ஜெயலலிதாவை ஏமாற்றினார். படிப்படியாக கட்சியில் ஆதிக்கம் செலுத்தி கட்சியை கையில் எடுத்துக்கொண்டார். ஒரு கட்டத்தில் பிராக்ஸி கவர்மெண்ட் என்ற முறையில் ஆட்சியை சசிகலா மறைமுகமாக நடத்திவந்தார். சசிகலா நினைப்பவர் தான் எம்எல்ஏ, அவர் கை காட்டுபவர் தான் அமைச்சர் என்ற நிலை உருவானது.
 
இதற்காக தந்திரமாக எப்படியோ பலர் மூலம் ஜெயலலிதாவிடம் சொல்ல வைத்து தனக்கு வேண்டிய செட்டப்பை ஆட்சி இயந்திரத்திலும் கொண்டு வந்தார் சசிகலா என தெரிவித்துள்ளார் பொன்னையன்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பொங்கல் தினத்தில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments