Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பண்ருட்டி ராமச்சந்திரனுடன் சசிகலா சந்திப்பு: முக்கிய அறிவிப்பு!

Advertiesment
sasikala panruti
, ஞாயிறு, 31 ஜூலை 2022 (17:43 IST)
பண்ருட்டி ராமச்சந்திரனுடன் சசிகலா சந்திப்பு: முக்கிய அறிவிப்பு!
அதிமுகவின் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை சசிகலா சந்தித்தபின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் உடனான சந்திப்புக்கு பின் சசிகலா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுகவில் உள்ளவர்கள் எல்லோரும் தனக்கு வேண்டியவர்கள்தான் என்றும் அதிமுக பின் தற்போதைய நிலை காலப்போக்கில் சரியாகிவிடும் என்று தெரிவித்தார். அதிமுகவில் அனைவரும் ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
 எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இரண்டு பிரிவுகளில் தற்போது அதிமுக இருக்கும் நிலையில் அதிமுகவை ஒன்றிணைக்க சசிகலா களம் இறங்கியதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் அதிமுகவில் மூத்த தலைவர்களை சந்தித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சசிகலா அதிமுகவை ஒன்றிணைப்பாரா? அல்லது மேலும் அதிமுக உடையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பின்லேடன் குடும்பத்திடம் பணம் வாங்கிய இங்கிலாந்து இளவரசர்? – பரபரப்பு தகவல்!