Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெ.வை கொலை செய்தது சசிகலா ; ஓ.பி.எஸ் உடந்தை - வெடிக்கும் மு.க.ஸ்டாலின்

, வியாழன், 2 மார்ச் 2017 (16:38 IST)
தமிழக முன்னால் முதல்வர் ஜெயலலிதாவை அவரது தோழி சசிகலாதான் கொலை செய்தார் எனவும், அதற்கு ஓ.பன்னீர் செல்வம் உடந்தையாக இருந்தார் எனவும் எதிர்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
திமுக சார்பில் பேச்சாளர்கள் கூட்டம் சமீபத்தில் சென்னை தி.நகரில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் மாநிலம் முழுவதிலிமிருந்து 500 பேர் கலந்து கொண்டனர். 
 
அப்போது, திமுக பேச்சாளர்கள் பொருளாதார பிரச்சனையில் சிக்கியிருப்பதாக பலர் மு.க.ஸ்டாலினிடம் புகார் தெரிவித்தனர்.
 
அதன்பின் பேசிய மு.க.ஸ்டாலின் “ திமுக பேச்சாளர்களின் கோரிக்கைகளை கழகம் பரிசீலிக்கும், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா முதல் குற்றவாளி. அவரது மரணம் மர்மாக இருக்கிறது. அவரை கொலை செய்தது சசிகலதான் என ஆணித்தரமாக நீங்கள் அனைவரும் பேச வேண்டும். அதற்கு உடந்தையாக இருந்தது ஓ.பன்னீர் செல்வம்தான் என்பதை மக்கள் மனதில் பதிய வையுங்கள். எனெனில், மருத்துவமனையில் ஜெ. இருந்த போது, அங்கு ஓ.பி.எஸ் அமைதியாகவே இருந்தார். எனவே இதுபற்றி எல்லா மேடைகளிலும் பேசுங்கள். உங்கள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும்” என பேசினார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய வங்கிகளுக்கு அமெரிக்க செக்: கேள்விக்குறியாய் நாட்டின் வளர்ச்சி!!