தமிழ் புத்தாண்டு முயற்சியை கைவிட வேண்டும்! – சசிக்கலா வேண்டுகோள்!

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (14:30 IST)
தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடும் முயற்சியை அரசு கைவிட வேண்டும் என சசிக்கலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் முன்னதாக கருணாநிதி ஆட்சியின்போது பொங்கல் கொண்டாடப்படும் தை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது. ஆனால் வழக்கம்போல சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட வேண்டும் என அதற்கு எதிர்ப்புகளும் இருந்தன

தொடர்ந்து அதிமுக ஆட்சி அமைத்த நிலையில் தை முதல் நாள் பொங்கல் மட்டுமே கொண்டாடப்பட்டு வந்தது. தற்போது மீண்டும் திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில் எதிர்வரும் ஜனவரியில் பொங்கல் கொண்டாடுவதற்கான பொங்கல் தொகுப்பு பையில் பொங்கல் வாழ்த்துகளுடன், தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் என்ற வாசகங்களும் அச்சிடப்பட்டுள்ளன. 

இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து கோரிக்கை விடுத்துள்ள சசிக்கலா தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments