ஓபிஎஸ்-க்கு டிமிக்கி கொடுத்து வந்த சசிகலா: அப்பல்லோ ரகசியம்!
ஓபிஎஸ்-க்கு டிமிக்கி கொடுத்து வந்த சசிகலா: அப்பல்லோ ரகசியம்!
ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிளவுபட்டுள்ளது. ஆர்கே நகர் தேர்தலில் இரு அணிகளையும் சேர்ந்த டிடிவி தினகரன் மற்றும் மதுசூதனன் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
இதனால் இரு அணிகளும் ஒருவர் மீது ஒருவர் கடும் விமர்சனத்தை வைத்து வருகின்றனர். குறிப்பாக ஓபிஎஸ் அணியினர் ஜெயலலிதாவின் மரணம் மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை வைத்து சசிகலா அணிக்கு எதிராக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஓபிஎஸ், ஜெயலலிதாவின் மரணத்தை அரசியலாக்கும் எண்ணம் தனக்கு இல்லை என கூறினார். மேலும் மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரது சிகிச்சை குறித்து சசிகலாவிடம் கேட்டால் சசிகலா என்னிடம் முகம் கொடுத்துக்கூட பேச பேச மாட்டார், அப்படியே நழுவி விடுவார் என கூறினார்.
ஜெயலலிதாவின் சிகிச்சை விவரம் முழுவதும் சசிகலாவுக்கு மட்டுமே தெரியும். எங்களுக்கு ஜெயலலிதாவை காப்பாற்ற முடியவில்லையே என்ற ஏக்கம் உள்ளது. நான் ஜெயலலிதாவுக்கு மட்டுமே விசுவாசமாக இருந்தேன். இதனால் தான் சசிகலா குடும்பத்தினர் என்னை அரசியலை விட்டு ஒதுக்க பார்த்தனர் என ஓபிஎஸ் கூறினார்.