Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிவாரண உதவி வாங்கச் சென்ற போது நேர்ந்த சோகம்...

Webdunia
சனி, 24 நவம்பர் 2018 (13:30 IST)
கஜாபுயல் பாதித்த பகுதிகளில் தமிழக அரசும் ஏனைய தனியார் தொண்டு நிறுவனங்களும் நிவாரண உதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வேதாரண்யத்திலுள்ள தலைஞாயிறு ஒன்றியத்தை சேர்ந்த நடராஜன் மனைவி அமுதா.  அதே பகுதிய சேர்ந்த சுமதி செல்வராசு, ராஜகுமாரி, சரோஜா , மணி போன்றோர் நேற்று முன் தினம் இரவில் நிவாரணப் பொருட்களை வாங்குவதற்காக சென்று கொண்டிருந்தனர்.
 
அப்போது நாகூர் நோக்கி சாலையில் விரைவாக சென்ற வாகனம் ஒன்று இந்த 5 பேர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.
 
இதுகுறித்த அறிந்த போலீஸார் இந்த விபத்துக்கான காரணம் பற்றி விசாரித்து வருகின்றனர்.
 
மேலும் கல்லூரியில் பி.ஏ படித்து வந்த மாணவி அனுசுயா என்பவர் தன் வீடுக்கு அருகே உள்ள பகுதியில் நிவாரண உதவியை பெறுவதற்காக சென்றார்.
 
அப்போது மழையில் நனைந்த ஈரப்பதமான வீட்டுச் சுவர்  ஒன்று அனுசுயா மீது விழுந்தது.  இதில் அவர் உடல் நசுங்கி பலியானார். இதனையடுத்து போலிஸார் அவரது பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாதங்களில் ரூ.10,000 கோடி வருமானம்.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு கொட்டும் லாபம்..!

எங்கும், எப்போதும் அலட்சியம்.. விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.. ஈபிஎஸ்

நடுநிலை விசாரணைக்கு தயார்.. கடும் நெருக்கடியால் இறங்கி வந்த பாகிஸ்தான் அரசு.

சிந்து நதிநீரை நிறுத்தி எங்கே தேக்கி வைப்பீர்கள்? மத்திய அரசுக்கு ஒவைசி கேள்வி..!

அபிநந்தன் கழுத்தை அறுத்துவிடுவேன்: பாகிஸ்தான் கர்னல் செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments