Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நம்ம பாக்கெட்டுல பணம் பொங்கி வழிஞ்சா..! – சரத்குமாரை கலாய்த்த எஸ்.வி.சேகர்!

நம்ம பாக்கெட்டுல பணம் பொங்கி வழிஞ்சா..! – சரத்குமாரை கலாய்த்த எஸ்.வி.சேகர்!
, ஞாயிறு, 15 மார்ச் 2020 (11:07 IST)
தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெறுவதாக சரத்குமார் பேசியதை நக்கல் செய்து பேசியுள்ளார் பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர்

நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் அதிமுக கூட்டணியில் இருந்து வருகிறார். 2011ல் அதிமுக கூட்டணியோடு இணைந்து தென்காசி தொகுதியில் வெற்றிபெற்றவர், கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவினாலும், தொடர்ந்து அதிமுக கூட்டணியில் நீடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது பற்றி அவரிடம் கேட்டபோது ”ரஜினிகாந்த் பற்றி பேச வேண்டும் என்றால் என் வங்கி கணக்கில் 5 லட்சம் அனுப்புங்கள். தமிழகத்தில் வெற்றிடம் என்பதே இல்லை. அதிமுக ஆட்சியில் தமிழகம் சிறப்பாக வழிநடத்தப்படுகிறது” என்று பேசியிருந்தார்.

அவரது இந்த பேச்சை குறிப்பிட்டு தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் ” நம்ம பாக்கெட்டுல பணம் பொங்கி வழிஞ்சா ஊர்ல எல்லார்கிட்டயும் பணம் பொங்கி வழியுதுன்னு மனசு நினைக்கும்.” என கூறியுள்ளார்.

அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள, அதிமுக சிறந்த நிர்வாகம் செய்வதாக முதல் மாநிலம் என சான்று அளித்த பாஜகவில் இருந்து கொண்டு தனது சக கூட்டணி கட்சி தலைவரை எஸ்.வி.சேகர் இப்படி பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதுகுறித்து அரசியல் வட்டாரங்கள் பேசும்போது அவருக்கு பாஜகவிலேயே சரியான அங்கீகாரம் இல்லை எனும்போது இதையெல்லாம் கண்டுகொள்ள தேவையில்லை என கேஷுவலாக போய் விடுகிறார்களாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேரளா நபருடன் வந்த 47 தமிழர்கள்: கொரோனா அபாயம்!