Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எச்.ராஜாவுக்கு வயிற்றுப்போக்கு வர வைத்த கமல்: சுப. உதயகுமார் அதிரடி!

எச்.ராஜாவுக்கு வயிற்றுப்போக்கு வர வைத்த கமல்: சுப. உதயகுமார் அதிரடி!

எச்.ராஜாவுக்கு வயிற்றுப்போக்கு வர வைத்த கமல்: சுப. உதயகுமார் அதிரடி!
, வெள்ளி, 21 ஜூலை 2017 (16:32 IST)
நடிகர் கமல் கடந்த சில தினங்களாக அரசியல் கருத்துக்கள் அதிகமாக கூறி வருகிறார். தனது செய்தியாளர்கள் சந்திப்பிலும் தனது டுவிட்டர் பக்கத்திலும் தமிழக அரசையும் ஆட்சியாளர்களையும் ஒரு பிடி பிடிக்கிறார் கமல்.


 
 
இதனால் நடிகர் கமல் அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நடிகர் கமலை பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா மற்றும் அதிமுகவை சேர்ந்த தமிழக அமைச்சர்கள் கமலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
 
நடிகர் கமல் அரசியலுக்கு தகுதியற்றவர், முதுகெலும்பில்லாத கோழை என சகட்டு மேனிக்கும் விமர்சித்தாலும், நடிகர் கமல் சளைக்காமல் திரும்பி அடிக்கிறார். அவரது ஒவ்வொரு டுவீட்டும் தமிழக அரசியல் களத்தி எதிரொலிக்கிறது, இதனால் மீண்டும் பதறிப்போய் கமலை விமர்சிப்பவர்கள் பதில் கொடுக்கின்றனர்.
 
இந்நிலையில் நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதை எதிர்த்த சுபா உதயகுமார் கமல் அரசியலுக்கு வருவதை ஒரு காரணத்துக்காக ஆதரிக்கிறார். இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவு சொன்றை போட்டுள்ளார்.
 
அதில், தமிழிசைகளுக்கும், எச் ராஜாக்களுக்கும், அம்மாவின் கோடீஸ்வரப் பிள்ளைகளுக்கும் வயிற்றுப்போக்கை உருவாக்குகிற ஒரே காரணத்துக்காகவாவது கமல்ஹாசனை ஆதரிக்கத் தோன்றுகிறது. ஆனால் அவர் அரசியல்/பொதுவாழ்வு அனுபவமற்ற நடிகர் என்பதால் தயக்கமும் எழுகிறது என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜியோ 4ஜி இலவச செல்போன் இதுதான் - வெளியான புகைப்படம்