Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் கனமழை ; செம்பரம்பாக்கம் ஏரி மூழ்கியதா? - அரசு விளக்கம்

Webdunia
வியாழன், 2 நவம்பர் 2017 (12:24 IST)
செம்பரம்பாக்கம் ஏரி குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகளுக்கு அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


 

 
தமிழகத்தில் தொடங்கியுள்ள வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பல இடங்கள் நீரில் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
 
இந்நிலையில், 2015ம் ஆண்டு ஏற்பட்டது போல், தற்போதும் செம்பரம்பாக்கம் ஏரி நிறைந்து வருகிறது எனவும், விரைவில் அது உடைந்து சென்னையில் பல சேதங்களை உருவாக்கும் என வாட்ஸ்-அப்பில் செய்தி பரவியது. இது சென்னை வாசிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியை பார்வையிட்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏரியின் நீர்மட்டம் 15 சதவீதத்தை மட்டுமே எட்டியுள்ளதால் மக்கள் பீதியடைய வேண்டாம் என கூறியுள்ளார்.
 
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 364.5 கோடி கன அடியாகும். தற்போது அது 70.85 அடியாக இருக்கிறது. அதேபோல், சோழாவரம் ஏரி மொத்த கொள்ளளவு 64.5 கன அடி. அதில் 52.45 அடியை எட்டியுள்ளது. செங்குன்றம் ஏரி மொத்த கொள்ளளவான 50.20 அடியில் 34 அடியை எட்டியுள்ளடு குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு இன்னொரு அடி.. இந்தியாவின் நட்பு நாடாகிறது ஆப்கானிஸ்தான்..!

அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்.. இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் பிரதமர்..!

மீண்டும் பரவுகிறதா கொரோனா வைரஸ்? ஹாங்காங், சிங்கப்பூரில் பரபரப்பு..!

டாய்லெட் வெடித்து சிதறியதில் 20 வயது இளைஞர் படுகாயம்.. விசாரணையில் திடுக் தகவல்..!

10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய இரட்டை சகோதரிகளுக்கு ஒரே மதிப்பெண்கள்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments