Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ருத்ராவின் ரூபிக் க்யூபிக் விளையாட்டு – உலக சாதனை நிகழ்வு

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2023 (21:12 IST)
4 ½ வயது சிறுமி ரூபிக் க்யூபிக்கில் 40 வினாடிகளில் கலர் சேர்த்து உலக சாதனை பிடித்தார்.
 
திருப்பூர் மாவட்டம், அவிநாசி பகுதியினை சார்ந்தவர் பிரேம், இவர் தனியார் வங்கி கிளை மேலாளராக பணியாற்றி வருகின்றார். இவரது மனைவி ஹரித்யா இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இவர்களது மூத்த மகள் ருத்ரா பிரேம் (வயது 4 ½), இவர் அதே பகுதியில் தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகின்றார். இந்த சிறுமி கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ரூப்ரிக் க்யூபிக் என்கின்ற மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டினை கற்றுக் கொண்டுள்ளார். மேலும், இச்சிறுமியின் தாயார் விடுமுறை தினத்தன்றும் உடல்நிலை சரியில்லா போது விளையாடியதை பார்த்த இச்சிறுமி அதே போல் விளையாட கற்றுக் கொண்டார். இரு மாதங்களில் இந்த ரூப்ரிக் க்யூபிக் கேமில் ஒரே பகுதியில் உள்ள கலரினை இணைக்கும் முயற்சியினை செய்து, ஒரே கலரினை ஒரே பக்கம் கொண்டு வரும் திறனை கற்றுக் கொண்டுள்ளார். மேலும், யாரும் 40 வினாடிகளில் செய்யாத நிலையில், இச்சிறுமி செய்து காண்பித்து உலக சாதனை பிடித்துள்ளார். கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தின் பின்புறம் உள்ள அவர்களது உறவினர் வீட்டில் நடைபெற்ற இந்த உலக சாதனை நிகழ்ச்சியில், ஜெட்லி நடுவராக இருந்து இந்த உலக சாதனையினை பதிவு செய்தார். மேலும், ஜெட்லி புக் ஆப் ரெக்கார்டு என்கின்ற உலக சாதனையில் இந்த நிகழ்வு இடம்பெறுவதாகவும், இச்சிறுமியின் ஞாபக ஆற்றல் மற்றும் மூளையின் திறன் போற்றப்பட வேண்டுமென்றும் தெரிவித்தார். மேலும், இந்த 
 
பேட்டி : - 1) ருத்ரா பிரேம் – 4 ½ வயது சிறுமி ( உலக சாதனை நிகழ்ச்சியில் சாதனை பிடித்த சிறுமி ) 
 
2) ஜெட்லி – உலக சாதனையாளர் நடுவர் – (ஜெட்லி புக் ஆப் ரெக்கார்டு)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments