Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூ. 1,003 கோடி முதலீட்டில் 840 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் BIG TECH நிறுவனம்- அரசு தகவல்

Advertiesment
b teck , cm  stalin

Sinoj

, செவ்வாய், 23 ஜனவரி 2024 (14:01 IST)
BIG TECH நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம் சிப்காட்- பிள்ளைப்பாக்கம் தொழிற் பூங்காவில் ரூ. 1,003 கோடி முதலீட்டில் 840 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், உலகத்தரம் வாய்ந்த மின்னணு சாதனங்களுக்கான கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தி செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளதாவது: 
 
''அமெரிக்காவைச் சேர்ந்த கார்னிங் இண்டர்நேஷனல் கார்ப்பரேஷன் (Corning International Corporation) மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஆப்டிமஸ் இன்ஃப்ராகாம் லிமிடெட் (Optiemus Infracom Limited) ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ் பிரைவேட் (Bharat Innovative Glass Technologies Private Limited – BIG TECH) நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம் சிப்காட்- பிள்ளைப்பாக்கம் தொழிற் பூங்காவில் ரூ. 1,003 கோடி முதலீட்டில் 840 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், உலகத்தரம் வாய்ந்த மின்னணு சாதனங்களுக்கான கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை நிறுவுவதற்கு, தமிழ்நாடு அரசின் முதலீடு ஊக்குவிப்பு முகமையான ‘Guidance’ மற்றும் ‘BIG TECH’ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மாண்புமிகு முதலமைச்சர் 
மு.க.ஸ்டாலின்  முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது''என்று தெரிவித்துள்ளது.

மேலும், ''ஜப்பான் நாட்டின் Ehime Prefecture கவர்னர் திரு. நாகாமுரா டோகிஹிரோ, பேரவைத் தலைவர் திரு. டாகாயாமா யாசுஹிடோ, தொழில்துறை கொள்கை பிரிவு மேலாண்மை இயக்குநர் திரு. மாட்சுடா யுஹிகோ, சென்னையிலுள்ள ஜப்பான் நாட்டு துணைத் தூதர் திரு. டாகா மாசாயுகி ஆகியோர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை  சந்தித்துப் பேசினார்கள என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக எம்எல்ஏ மகன், மருமகள் எங்கே? 3 தனிப்படைகள் அமைப்பு.! தேடும் பணி தீவிரம்.!!