Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை ரேஸ் கிளப் ஒரு மாதத்தில் ரூ.730 கோடி செலுத்த ஆணை

சென்னை ரேஸ் கிளப் ஒரு மாதத்தில் ரூ.730 கோடி செலுத்த ஆணை
, புதன், 29 மார்ச் 2023 (18:10 IST)
சென்னை ரேஸ் கிளப் ஒரே மாதத்தில் ரூ.730 கோடி வாடகை பாக்கி கட்ட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பெற்றுள்ளது. கடந்த 1970 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரையிலான வாடகை பாக்கி சென்னை ரேஸ் கிளப் வைத்திருந்ததாக சென்னை ஹை கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 
 
இந்த வழக்கில் சென்னை ரேஸ் கோர்ஸ் கிளப் 730.70 கோடியை தமிழக அரசுக்கு ஒரு மாதத்தில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 160 ஏக்கர் அரசு நிலத்திற்கான வாடகையை செலுத்த தவறியது கண்டனத்துக்குரியது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 
 
ஒரு சில பணக்காரர்களுக்காக ஒதுக்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்தில் தற்போது நடக்கும் செயல்களில் எந்த பொதுநலமும் இல்லை என்றும் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள நிலத்தை மீட்டு மக்கள் நலனுக்காக பயன்படுத்தலாம் என்றும் நீதிபதி அரசுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அம்மா உணவகத்திற்கு 2 மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு-!