Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் பரிசு ரூ.500.. வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவிப்பு..!

Webdunia
வியாழன், 4 ஜனவரி 2024 (08:24 IST)
தமிழகத்தில் ஏற்கனவே பொங்கலுக்கு தேவையான அரிசி கரும்பு ஆகியவை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் அண்டை மாநிலமான  புதுவையில் பொங்கல் பரிசாக ரூபாய் 500 வழங்கப்படும் என்றும் இந்த பணம் ரேஷன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநில அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் புதுச்சேரியில் உள்ள ரேஷன் கார்டுகளுக்கு அரிசி வெல்லம் மற்றும் பொங்கல் தொகுப்புகளுக்கு பதிலாக ரேஷன் கார்டுகளுக்கு தலா 500 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: இந்த மாதம் முன்கூட்டியே மகளிர் உரிமைத்தொகை வருகிறதா? பெண்கள் மகிழ்ச்சி..!

பொங்கலுக்கு முன்பாக அனைவரும் வங்கி கணக்கிலும் இந்த பணத்தை  வரவு   வைக்க புதுசேரி அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கலுக்கு வேட்டி புடவைக்காக ரூபாய் 1000 வழங்கப்பட்ட நிலையில் தற்போது அரிசி வெல்லம் மற்றும் பொங்கல் தொகுப்பாக கூடுதலாக 500 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்திலும் இதே போல் ஒரு அறிவிப்பு வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Edited by siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போடுபவர்கள் மீது வழக்குப்பதிவு: ஜனவரி 1 முதல் அமல்..!

இளையராஜா ஒரு இசை கடவுள்,, கடவுளுக்கு கோயிலுக்கு போகணும்னு அவசியமே இல்லை: கஸ்தூரி

ஆகமம் என்பது மனிதர்களால் உருவாக்கப்பட்டது.. இளையராஜா விவகாரம் குறித்து ஆன்மீக பேச்சாளர்..

நான் சுயமரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல... ஆண்டாள் கோவில் சம்பவம் குறித்து இளையராஜா

ஆரஞ்சு அலர்ட் மட்டுமின்றி ஆப்பிள் அலர்ட்டுக்கும் செம்பரம்பாக்கம் ஏரி தாங்கும்: அமைச்சர் துரைமுருகன்

அடுத்த கட்டுரையில்
Show comments