Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.4000: அமைச்சர் அறிவிப்பு..!

Webdunia
புதன், 29 மார்ச் 2023 (15:53 IST)
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூபாய் 4000 வழங்கப்படும் என புதுவை மாநில சமூக நலத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதும் இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் இழந்தனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி அளிக்க வேண்டும் என பல மாதங்களாக கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் புதுச்சேரி மாநிலம் இதுகுறித்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.4000 வழங்கப்படும் என்றும் பெற்றோரில் ஒருவரை மட்டும் இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூபாய் 2000 நிதி வழங்கப்படும் என்றும் அம்மாநில சமூக நலத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 
 
புதுச்சேரி மாநிலத்தின் இந்த அறிவிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று பங்குனி உத்திரம்.. உச்சத்திற்கு சென்றது பூ விலை.. மல்லிகைப்பூ இவ்வளவா?

சென்னையில் அதிகாலை இடி மின்னலுடன் மழை: இன்று 6 மாவட்டங்களில் மழை பெய்யும்..!

வந்துவிட்டது Gemini Live.. வேற லெவலில் யோசித்த Google.. அடுத்த கட்டத்திற்கு செல்லும் AI chatbot..!

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments