ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டினால் ரூபாய் 1000 அபராதம் மற்றும் மூன்று மாதங்களுக்கு ஓட்டுனர் உரிமை முடக்கப்படும் என தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரி அரசு அதிரடியாக அறிவிப்பு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தமிழகத்தில் ஏற்கனவே ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது புதுச்சேரியிலும் ஹெல்மெட் கட்டாயம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் ரூபாய் 1000 அபதாரம் என்றும் அதுமட்டுமின்றி மூன்று மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் முடக்கப்படும் என்றும், மூன்று மாதங்களில் வாகனங்களை ஓட்ட முடியாது என்றும் புதுச்சேரி அரசு அதிரடியாக அறிவித்துள்ளது
ஹெல்மெட் அணியாமல் வாகனங்களில் பயணம் செய்வதால் பல விபத்துக்கள் ஏற்படுவதாகவும் இதனால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் இந்த நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டும்படி அரசு அறிவிப்பு அறிவுறுத்தியுள்ளது
ஹெல்மெட் அணியாமல் வாகனத்தில் சென்றால் ஆயிரம் ரூபாய் அபராதம் என்ற அதிரடி உத்தரவு இருசக்கர வாகன ஓட்டிகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது