Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளாட்சி தேர்தல் தேதி மாற்றப்படும்: பழனிச்சாமி அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 6 டிசம்பர் 2019 (11:31 IST)
உள்ளாட்சி தேர்தல் தேதி மாற்றப்படும் என்றும் புதிய தேர்தல் தேதி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி சற்றுமுன் அறிவித்துள்ளார்
 
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30 ஆகிய இரண்டு நாட்களில் நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் இது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் திமுக, வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தது 
 
தொகுதி மறு வரையறை செய்த பின்னரே உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று திமுக தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு சற்று முன்னர் வெளியானது. இதில் தமிழகத்தில் தொகுதி மறு வரையறை செய்யப்படாத ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்றும் அந்த ஒன்பது மாவட்டங்களில் தொகுதி மறு வரையறை செய்த பின்னர் நடத்த வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது
 
இதனை அடுத்து சற்று முன்னர் பேட்டியளித்த மாநில தலைமை தேர்தல் ஆணையர் பழனிச்சாமி அவர்கள் ’உள்ளாட்சித் தேர்தல் தேதி மாற்றப்படும் என்றும் புதிய தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் 
 
இதனால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாது என்பதும் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் புதிய தேதியில்தான் தேர்தல் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை..! கடன் பிரச்சினையால் விபரீத முடிவு.!!

கனமழையால் தமிழகத்தில் 4,385 ஹெக்டேர் பயிர்கள் சேதம்.!

குற்றால அருவிகளில் குளிக்கலாம்.. மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

எடப்பாடி பழனிசாமி கை நீட்டுபவர் தான் பிரதமராக வருவார்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி

திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments