Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு; இந்திய மாணவர் சங்கம் தர்ணா போராட்டம்

Webdunia
செவ்வாய், 27 மார்ச் 2018 (09:42 IST)
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் போராட்டம் கடந்த சில நாட்களாக தீவிரமாக இருந்து வரும் நிலையில் தற்போது தூத்துக்குடி பகுதியில் இந்திய மாணவர் சங்கம் தர்ணா போராட்டம் நடத்துகின்றனர்.
தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையால் அந்த பகுதி மக்களுக்கு புற்றுநோய் உள்பட பலவித நோய்கள் ஏற்படுவதாக கூறி அந்த ஆலையை மூடும்படி அப்பகுதி மக்கள் கடந்த பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்த நிலையில் அடுத்த ஆண்டுடன் ஸ்டெர்லைட் ஆலையின் ஒப்பந்தம் முடிவடையவுள்ள நிலையில் மத்திய அரசு அந்த ஒப்பந்தத்தை நீடித்துள்ளது மட்டுமின்றி இன்னொரு ஆலை ஏற்படுத்தவும் முடிவு செய்துள்ளது.
 
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆலையை மூட வலியுறுத்தியும் நேற்று வ.உ. சிதம்பரனார் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  
இதனைத்தொடர்ந்து இன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு தொழிற்பயிற்சி நிலையம் எதிரே ஆலையை மூட வலியுறுத்தி,  இந்திய மாணவர்கள் சங்கம்   கோஷங்கள் எழுப்பியபடி தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாதத்தின் கடைசி நாளில் சரிந்தது தங்கம்.. இன்னும் சரிய அதிக வாய்ப்பு?

நாங்கள் உறுப்பினர்களாக சேரவே இல்லை.. ‘ஓரணியில் தமிழ்நாடு’ திட்டம் தோல்வியா?

தவெகவில் ஓபிஎஸ்? அவைத்தலைவர் பதவி வழங்குகிறாரா விஜய்? பரபரப்பு தகவல்..!

அம்மாவை தப்பா பேசிய உங்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்! - கூட்டணி முறிவை படம் போட்டு காட்டிய ஓபிஎஸ் அறிக்கை!

இந்தியா கச்சா எண்ணெய்க்காக பாகிஸ்தானிடம் நிற்கும் நிலை வரலாம்..? - ட்ரம்ப் கிண்டல் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments