Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி மேலாண்மை வாரியத்திற்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்? தமிழகம் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 27 மார்ச் 2018 (09:30 IST)
காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்கள் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. சுப்ரீம் கோர்ட் கொடுத்த காலக்கெடு முடிய இன்னும் மூன்று நாட்களே உள்ளது. ஆனால் காவிரி மேலாண்மை அமைப்பதில் மத்திய அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் காவிரி மேலாண்மை அமைப்பதில் தற்போது புதிய சிக்கல் எழுந்துள்ளதால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் தேதி இன்று காலை 11 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்கப்படவுள்ளது. இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடமே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துவிட்டால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது. கடந்த 2013ஆம் ஆண்டிலும் இதே காரணத்தை கூறி காவிரி மேலாண்மை அமைக்க கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. தற்போதும் அதே காரணத்தை கர்நாடகம் கூறும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

நன்னடத்தை விதிகள் அமலானால் காவிரி மேலாண்மை வாரியம் அல்லது மாற்று அமைப்பு உருவாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்ற தகவல் தமிழக அரசு மற்றும் விவசாயிகளுக்கு அதிர்ச்சிதரும் ஒரு செய்திதான் என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments