Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போட்டிபோட்டு விபச்சாரம்: கடைசியில் நேர்ந்த கொடூரம்!!

Webdunia
வியாழன், 8 நவம்பர் 2018 (11:57 IST)
விபச்சாரப் போட்டியில் மெரினாவில் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த 4ந்தேதி சென்னை மெரினாவில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து திருவல்லிக்கேணியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வினோத்குமார், பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சூர்யா ஆகியோரிடம் போலீஸார் குடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.
 
இதில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் கலைச் செல்வி என்பது தெரியவந்தது. கலைச்ச்செல்வி மெரினாவில் விபச்சார தொழில் செய்துவந்துள்ளார். அப்போது தான் அவருக்கு வினோத்குமாரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
 
வினோத்குமாரும் அவரது நண்பர் சூர்யாவும் கலைச்செல்வியுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். சமீபத்தில் கலைச்செல்வி தனது தோழி ஒருவரை வினோத்குமாரிடம் அறிமுகம் செய்துள்ளார்.
 
அந்த பெண் அழகாக இருந்ததால், வினோத்குமார் மற்றும் அவரது நண்பர் சூர்யா, கலைச்செல்வியுடன் பழகுவதை நிறுத்திக்கொண்டனர். இதனால் கலைச்செல்வி வினோத்குமாருக்கு போன் செய்து ஏன் என்னிடம் பழக மாட்டிங்கிறீர்கள் என கேட்டுள்ளார். 
 
கடந்த சனிக்கிழமையன்று கலைச்செல்வி, வினோத்குமார், சூர்யா ஆகிய மூவரும் மெரினாவில் மது அருந்தியுள்ளர். பின்னர் மூவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது கலைச்செல்வி என்னுடன் ஏன் பழைய மாதிரி பழக மாட்டிங்கிறீர்கள் என மீண்டும் கேட்டுள்ளார்.
 
போதையில் இருந்த வினோத்குமார், சூர்யா இதனால் கடுப்பாகி பீர் பாட்டிலை எடுத்து கலைச்செல்வியை அடித்து கொலை செய்து அவரை அங்கேயே புதைத்துவிட்டு சென்றுள்ளனர். போலீஸார் அவர்களிடம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments