Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெளிநாட்டு அழகிகளுடன் உல்லாசம் - மோசடி ரியல் எஸ்டேட் அதிபர் வாக்குமூலம்

Advertiesment
வெளிநாட்டு அழகிகளுடன் உல்லாசம் - மோசடி ரியல் எஸ்டேட் அதிபர் வாக்குமூலம்
, புதன், 10 ஜனவரி 2018 (11:38 IST)
ரியல் எஸ்டேட் மோசடி வழக்கில் சிக்கிய சென்னையை சேர்ந்த வெங்கட்ராமன், மோசடி செய்த பணத்தில் வெளிநாடுகளுக்கு சென்று பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

 
கேளம்பாக்கம் காமராஜ் தெருவை சேர்ந்தவர் வெங்கடரமணன்(57) ரியல் எஸ்டேட் புரோக்கர். இவர் சென்னையை சேர்ந்த பலரிடம் நிலம் வாங்கித் தருவதாக கூறி 40 கோடி ரூபாய் ஏமாற்றியுள்ளார். பணத்தை ஏமாந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், மஹாராஸ்டிராவில் பதுங்கியிருந்த வெஙட்ராமனை மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மத்திய குற்றப்பிறிவு போலீஸார் கடந்த 2ம் தேதி கைது செய்தனர். 
 
இதனையடுத்து வெங்கட்ராமன் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் ஆழ்வார்பேட்டையில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வந்த போது பிரதீப்குமார் என்பவரிடம் 35 ஏக்கர் நிலம் வாங்கி தருவதாக கூறி 1.70 கோடி ரூபாய் மோசடி செய்தேன். அதேபோல் கூட்டாளிகளுடன் சேர்ந்து கே.ஆர்.வி., பிராபர்ட்டிஸ் என்ற நிறுவனத்தினருக்கு நிலம் வாங்கி தருவதாக, 5.23 கோடி ரூபாய் மோசடி செய்தேன். கிரண் வர்கீஸ் தாமஸ் என்பவருக்கு, பெரும்பாக்கத்தில் 25 ஏக்கர் நிலம் வாங்கி தருவதாக கூறி, 50 கோடி ரூபாய் வாங்கினேன்.ஆனால் அவருக்கு 17.54 கோடி ரூபாய் மதிப்புள்ள 10.99 ஏக்கர் நிலத்தை மட்டுமே வாங்கி கொடுத்துவிட்டு மீதமுள்ள 32.46 கோடியை மோசடி செய்தேன். இங்கு இருந்தால் போலீஸில் மாட்டிக்கொள்வேன் என மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மஹாராஸ்டிராவுக்கு தப்பிச்சென்றேன்.  
 
திருடிய பணத்தில் சொந்தமாக, ஹெலிகாப்டர் வாங்கி இந்திரா ஏர் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் நடத்தி வந்தேன். சில மாதங்களுக்கு முன்பு எனது கூட்டாளிகளை போலீஸார் கைது செய்தனர். இதனால் மும்பை, கோவா, ஜெய்ப்பூர் என பல இடங்களில் தலைமறைவு வாழ்க்கை நடத்தினேன். 
 
மேலும், மஹாராஷ்டிராவில் ரியல் எஸ்டேட் தொழில் நிறுவனம் தொடங்கி ரஷ்யா, சிங்கப்பூர் நாடுகளை சேர்ந்த இளம்பெண்களை வேலைக்கு அமர்த்தினேன். அந்த நாடுகளுக்கு சென்று அழகிகளுடன் உல்லாசம் அனுபவித்து வந்தேன்” என அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொது நிகழ்ச்சியில் தூங்கிய முதல்வர்; கிண்டலடித்துத் தள்ளும் நெட்டிசன்கள்(வீடியோ இணைப்பு)