Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நியாயவிலைக்கடைகளில் விற்பனையாளர், கட்டுநர் பணி நியமனம்: ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்..!

நியாயவிலைக்கடைகளில் விற்பனையாளர், கட்டுநர் பணி நியமனம்: ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்..!

Mahendran

, புதன், 9 அக்டோபர் 2024 (10:20 IST)
கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக்கடைகளில் பணியாற்றுவதற்கான விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை சென்னை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் வெளியிட்டது. மேலதிக விவரங்களுக்கு http://drbchn.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இது குறித்து வெளியான அறிவிப்பில் சென்னை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிப்பாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலை கடைகளுக்கு விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யப்படுவதற்கான.
 
விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து http://drbchn.in இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் மட்டுமே 7. 11. 2024 அன்று பிற்பகல் 5 45 மணி வரை வரவேற்கப்படுகின்றன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
விற்பனையாளருக்கு தொகுப்பு ஊதியம் ரூ.6650 என்றும் ஓராண்டுக்கு பிறகு ஊதிய விகிதம் உயரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கட்டுநர் பணிக்கு தொகுப்பு ஊதியம் ரூ.5500 என்ற நியமன நாளில் இருந்து ஓராண்டு வரை இந்த சம்பளம் என்றும் ஓராண்டுக்கு பிறகு ஊதியம் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் நேரடி நியமனம் என்பது முறைகேட்டிற்கு வழிவகுக்கும் என்றும் பணம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே வேலை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்த அறிவிப்பு குறித்து எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை மாநிலக்கல்லூரி மாணவர் உயிரிழந்த விவகாரம்: உச்சகட்ட பாதுகாப்பு...!