Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதித்துறை வரலாற்றில் முதல்முறையாக 9 நாளில் தீர்ப்பு: பாலியல் வழக்கின் பரபரப்பு தகவல்..!

Webdunia
செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (15:01 IST)
நீதித்துறை வரலாற்றில் முதல்முறையாக ஒன்பது நாட்களில் பாலியல் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது 
 
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை ஜீவா, பாலமுருகன் ஆகிய இருவரும் பாலியல் வன்முறை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு இருவர் மீதும் வழக்கு செய்ய பதிவு செய்யப்பட்டது 
 
இதனை அடுத்து ஜீவா மற்றும் பாலமுருகன் ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர் கொடைக்கானல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த நிலையில் இந்த வழக்கு பதிவு செய்த ஒன்பது நாட்களில்  ஜீவா மற்றும் பாலமுருகன் ஆகிய இருவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர்களுக்கு ஏழு ஆண்டுகள் மற்றும் நான்கு மாதங்கள் சிறை தண்டனை விதித்தது. மேலும் 20000 ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்துள்ளது. 
 
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கடுமையான தண்டனை இருக்கும் பட்சத்தில் குற்றங்களை குறையும் என்ற நோக்கத்துடன் விரைவில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த வழக்கை சிறப்பாக நடத்திய கொடைக்கானல் காவல்துறையினரை பாராட்டுவதாகவும் நீதிபதி தனது தீர்ப்பு தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

முதல்வர் முக ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்: பெண் காவலர் அரிவாள் வெட்டு குறித்து ஈபிஎஸ்..!

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

EVM முறையை ஒழிக்க வேண்டும்..! ராகுல் காந்தி ட்வீட்..!!

அடுத்த கட்டுரையில்