Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 8 April 2025
webdunia

பாதுகாப்பு பணியில் இருந்த ராணி 'மோப்ப நாய்' ஓய்வு

Advertiesment
rani dog
, வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (16:40 IST)
சென்னை விமான நிலையத்தில் 10  ஆண்டுகளாக பாதுகாப்பு பணியில் இருந்த ராணி மோப்ப நாய் ஓய்வு பெற்றது.

சென்னை விமான    நிலையத்தில் டிடெக்டர், பாதுகாப்பு வீரர்கள் போன்றோர் பாணிகாப்புப் பணியில் இருந்தபோதிலும், அங்கு வெடி பொருட்கள், ரசாயனங்கள், போதைப்பொருட்கள் போன்றவற்றை கண்டறிய மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை என சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த ராணி என்ற மோப்ப நாய் வயது மூப்பின் காரணமாக நேற்று ஓய்வு பெற்றது.

இத்தனை ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த ராணியின் பணியைக் கவுரவிக்கும் விதத்தில்,அதற்கு ஓய்வு பெறும் நிகழ்ச்சியை மத்திய தொழிற்படை அதிகாரிகள்  நடத்தினர். இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெள்ளை மாளிகை அருகே மின்னல் தாக்கி 4 பேர் மயக்கம்!