Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராமர் பிள்ளை விவகாரம் : மோடி , தமிழிசை , பொன் .ஆர் என்ன முடிவெடுத்தார்கள் ...?

ராமர் பிள்ளை விவகாரம் : மோடி  , தமிழிசை , பொன் .ஆர் என்ன முடிவெடுத்தார்கள் ...?
, திங்கள், 10 டிசம்பர் 2018 (20:14 IST)
பாரத பிரதமருக்கும் , உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் கருணை மனு என்ற தலைப்பில் ராமர் பிள்ளை என்பவர் சில நாட்களுக்கு முன் ஒரு வீடியோ பதிவு வெளியிட்டடிருந்தார். அதில் இதுதான் என் கடைசி பேட்டி இனிமேல் நான் காணொளியில்  பேச மாட்டேன். இதை எனது இறுதி வாக்குமூலம் என்று கூட சொல்லலாம் என்று கூறியிருந்தார்.

அவர் இந்த வீடியோவில் கூறியுள்ளதாவது:
 
என்னுடைய தமிழ் மக்களுக்கு அன்பான வேண்டுகோள் : மூலிகை பெட்ரோல் குறித்த எனது செயல் விளக்கத்தை நான் அளித்த வாக்குறுதியின் படி வரும் 10 ஆம் தேதிக்குள் அளிப்பேன். அதற்காகத்தான் வரும் 10 தேதியை நான் தேர்வு செய்திருக்கிறேன். 
 
ஆகவே உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து அவசர வழக்காக எடுத்து இதை விசாரிக்க வேண்டும். நான் உங்கள் முன் மூலிகை பெட்ரோலை உற்பத்தி செய்து காட்டுகிறேன்.அதை  நீங்கள் சோதனைக்கு அனுப்பி வையுங்கள். இதை எனது வேண்டுகோளாக ஏற்றுக்கொள்ளுங்கள்.  நான் சரியாக நிரூபிக்கா விட்டால் என்னை சிறையில் அடைக்கலாம்: அல்லது  தூக்கில் கூட போடலாம். நான் எதற்கும் தயார்.
 
நான் வரும் 11ஆம் தேதி உயிருடன் இருப்பேனா இல்லையா என்பது மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் தழிழிசை சவுந்தரராஜன் கையில்தான் இருக்கிறது.

 
பொன் ராதாகிருஷ்ணனும் , தமிழிசையும் பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு திரு. மனோகர் ஜோஷியிடம் இந்த மூலிகை பெட்ரோல் குறித்து பேச வேண்டும்.
 
நான் மரணத்தருவாயில் நின்று இதை உயிர் பிச்சையாக கேட்கிறேன். இந்த ஏழை கண்டறிந்தது உண்மையா இல்லையா என்பதை  அவர்கள் தான் உலகிற்கு கூற வேண்டும் இவ்வாறு அந்த வீடியோவில் ராமர் பிள்ளை உருக்கமாக பேசியிருந்தார்.
webdunia
இந்நிலையில் ராமர் பிள்ளையின் மூலிகை  பெட்ரொல் என்பது நீண்டகாலமாக உள்ள பிரச்சனை ஆகும், நான் ஏற்கனவே அவருடன் பேசியிருக்கிறேன்  ஆதார பூர்வமான விஷயம் இருந்தால் இது குறித்து பேசலாம். யாரையும் உதாசீன படுத்தக் கூடாது இவ்வாறு பேசினார்.
 
இந்நிலையில் இன்று பலத்த எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்த ராமர் பிள்ளை என்ன ஆகும் என்பது இனி வரும் காலங்களில்தான் தெரியவரும் .

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா!